
குழந்தை திருடுபோன 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து கொடுக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம்
பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினிக்கு 19.06.2021 அன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் (20.06.2021) அன்று காலை மாலினி கழிவறை சென்று வருவதற்குள் மர்ம நபர் குழந்தையை திருடிச் சென்றார். இதையடுத்து தகவல் தெரிந்தவுடன் காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன்.IPS,. அவர்கள் மருத்துவமனை சென்று குழந்தையை பறிகொடுத்த மாலினியிடம் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டு CCTV camera பதிவுகளை ஆராய்ந்து திருடிச் சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதன்பேரில் கேமராவில் பதிவாகியிருந்த பொம்மிடி, வடசந்தையூர் பகுதியைச் சேர்ந்த ஜான்பாஷா மற்றும் அவரது கணவர் திருடிச் சென்றதை உறுதி செய்தனர். பின்னர் இருவரும் இண்டூரில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி தனிப்படை போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டு இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் குழந்தையின் பெற்றோர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தருமபுரி நகர காவல் நிலையத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன்.IPS. அவர்கள் முன்னிலையில் குழந்தையை தந்தை அருள்மணி மற்றும் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிகழ்வில் தருமபுரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாதுரை காவல் ஆய்வாளர் திரு.சரவணன், காவல் ஆய்வாளர் திருமதி.சங்கீதா ஆகியோர் இருந்தனர்.
*குழந்தையின் தந்தை அருள்மணி கண்ணீர் மல்க குழந்தையை பெற்றுக் கொண்டு காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.