
இது குறித்து தமிழக டிஜிபி திரு. திரிபாதி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் மாதவரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரணாக நின்று பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் பணியாற்றுபவர் இதுபோன்ற கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது மிகுந்த கண்டனத்திற்கும், கடும் தண்டனைக்கும் உரியது.
இது போன்ற ஒரு பாலியல் சம்பவத்தால் கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார், எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறை தலைவர் திரு.J.K.திரிபாதி அவர்களை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் Dr.R.G.ஆனந்த் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மன உளைச்சலை போக்கும் வகையில் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் Dr.R.G.ஆனந்த் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்