

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பகுதியில் உள்ள அருள்மிகு அழகுமலையான் திருக்கோவிலில் கோவில் கதவு உடைக்கப்பட்டு கோவிலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவில் அறங்காவலர்கள் ராஜேஸ்கண்ணன், சங்கரநாராயணன், பாலகிருஷ்ணன், கோகுல கண்ணன், சுந்தரபாண்டியன், வெங்கடாசலம், நடராஜன் ஆகியோர் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அவர்களின் உத்தரவின் பேரின் பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி , தென்கரை காவல் ஆய்வாளர்கள் சுகுமாறன், தலைமையில் தனிப்படை அமைத்த போலீசார் பெரியகுளம் பகுதியைச் சார்ந்த புவனேஸ்வரன் 22/21 , ஜெகதீஸ்வரன் 22/21, பிரதாப் சிங் 20 / 21, அந்தோனி பிரகாஸ் 22/21 ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான தங்கம், மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.