கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். தமிழக காவல் துறை தலைவர் எச்சரிக்கை’

641

காவல் துறை இயக்குநர் தமிழ்நாடு .சி.சைலேந்திரபாபு , அவர்கள் மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்

இதில் மதுரை மாநகர காவல் ஆணையாளர் , தென்மண்டல காவல் துறை தலைவர் மற்றும் காவல் ஆணையர் , திருநெல்வேலி மாநகர் , மதுரை , இராமநாதபுரம் , திண்டுக்கல் , திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவர்கள் , மதுரை , விருதுநகர் , திண்டுக்கல் , தேனி , இராமநாதபுரம் , சிவகங்கை , திருநெல்வேலி , தென்காசி , தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்களும் கலந்து கொண்டனர்

ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி , அவர்களுக்கு அதிகபட்ச தண்டணை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து . ரவுடிகளை சிறையிலடைக்க அறிவுரை வழங்கினார்

கட்டப்பஞ்சாயத்து , கந்துவட்டி , கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை தரம்பிரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here