


திருச்சி மாவட்டம் 14.07.2021 அன்று துறையூர் சேர்ந்த ரோஷினி என்பவர், அவரது வீட்டில் ஏற்பட்ட சிறு பிரச்சனைகளால், மனமுடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி அவரது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள முத்தரசநல்லூர் என்ற ஊரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வலிப்பு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்தபோது, இதனை அறிந்த ஜீயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலாஜி மற்றும் காவலர்கள் திரு.சரவணகுமார், கார்த்தி பெண் காவலர்கள் திருமதி.கீதா, செல்வி.சுலோச்சனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணிற்கு முதலுதவி செய்து அந்தநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் அப்பெண்ணிற்கு நினைவு திரும்பியபின் அவரிடம் விசாரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனை அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் மனித நேயத்துடன் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.