Home COVID-19 மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர் – சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய புதுக்கோட்டை காவல் கண்காண்ப்பாளர் நிஷா பார்த்திபன்!

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர் – சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய புதுக்கோட்டை காவல் கண்காண்ப்பாளர் நிஷா பார்த்திபன்!

0
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர் – சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய புதுக்கோட்டை காவல் கண்காண்ப்பாளர் நிஷா பார்த்திபன்!

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை சுவாசம் அளித்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்…

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் உட்கோட்டம், உடையாளிப்பட்டி காவல் சரகம், உடையாளிப்பட்டி சுடுகாடு அருகே 23.07.2021 – ஆம் தேதியன்று மின்கம்பத்தில் பராமரிப்பு பணிகள் பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்த குண்றாண்டார் கோவில், ஆழ்வான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ் (25) என்பவர் மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் உயிருக்கு போராடி தொங்கிய நிலையில் இருந்தவரை தகவலறிந்து அங்கு வந்த உடையாளிப்பட்டி காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மின் கம்பத்தில் இருந்து கீழே இறக்கி, மயக்க நிலையில் இருந்தவருக்கு காவலர் 2070 வெள்ளைச்சாமி என்பவர் தக்க நேரத்தில் CPR முறையில் முதலுதவி அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

உரிய நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு முதலுதவி செய்து இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய உடையாளிப்பட்டி காவல் நிலைய காவலரை புதுக்கோட்டை காவல் கண்காண்ப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here