Home தமிழ்நாடு காவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு

காவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு

0
காவலரின் வீரச்செயலுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டு

திருச்சி மாநகர தலைமை காவலர் திரு. சரவணன் த.கா.எண்.2061 ரோந்து பணியில் இருந்த போது TN52 T 6484 என்ற நிற்காமல் சென்ற வாகனத்தில் முன்பக்கம் தொற்றிக் கொண்டு பிடிக்க முயன்றபோது தூக்கி வீசப்பட்டார். அதன் பின்னால் விரட்டி வந்த தனிப்படை போலீசார் காரை சாமர்த்தியமாக மடக்கி பிடித்தனர். அதை ஓட்டி வந்த நபரிடமிருந்து சுமார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். உயிரை பணயம் வைத்து காரை விரட்டி சென்ற தலைமைக் காவலர் சரவணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது வீரச் செயலை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C. சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் ரூபாய் 25 ஆயிரம் பரிசு தொகையை வழங்கினார்கள்.

மேலும், தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைமை காவலர் சரவணனுக்கு ஆறுதல் கூறினார். தலைமைக் காவலர் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க திருச்சி காவல்துறை ஆணையர் அவர்களுக்கு காவல் துறைத் தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here