
மதுரையில் டெய்லர் அர்ஷத்திடம் ரூ.10 லட்சத்தை பறித்ததாக நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த அர்ஷத். டெய்லரான இவர் பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கினார்.
அந்த பணத்தோடு கூடுதல் பணத்தேவைக்காக பாண்டி என்பவர் அழைத்தன் பேரில் ஜூலை 5ல் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரிக்க வேண்டும் என்றுக்கூறி அர்ஷத், பாண்டி, அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை ஜீப்பில் அழைத்துச் சென்றார்.
சிறிது துாரம் சென்றதும் ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு அர்ஷத்தை இறக்கிவிட்டார். பணத்தை கேட்டதற்கு தங்கம், கஞ்சா கடத்தியதாக கைது செய்துவிடுவேன் என மிரட்டினார். மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் செய்தார்.
ஏ.டி.எஸ்.பி., சந்திரமவுலி விசாரணையில் உண்மை எனத்தெரிந்தது.
வசந்தி, பாண்டி, கார்த்திக் உட்பட 5 பேர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.