செங்கம் ஆகஸ்ட்-05
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே பெங்களூர் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் கடந்த
ஜூலை மாதம் 7ஆம் தேதி எஸ்பிஐ வங்கியில் 3 லட்சம் ரொக்க தொகையை எடுத்துக்கொண்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு நடந்து சென்ற செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர் மனோகரன் (வ.61) என்பவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்யிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சென்றனர்.
இதனை தொடர்ந்து பணத்தை பறி கொடுத்த ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர் மனோகரன் என்பவர் வேதனையுடன் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வங்கி மற்றும் வணிகங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலைமையிலான ஆய்வாளர் சரவணன் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்த நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி செங்கம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல்புழுதியூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் இருவரையும் இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது இவர்கள் ஏற்கனவே செங்கம் பகுதியில் 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அவர்களின் உத்தரவின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமரன் ஆலோசனையின்படி ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடிக்கப்பட்ட 3 லட்சம் ரொக்க தொகையை கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
இவர்கள் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் சித்தூர் மாவட்டம் ஓஜி என்கிற ஓரந்தாங்கள்குப்பம் பகுதியை சேர்ந்த பாபு மகன் அங்கையா (வ.18) மற்றும் சுப்பிரமணி மகன் கோவிந்தராஜிலு (வ.38) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.
இந்த வழக்கை விரைவாக தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி பிடித்து 3 லட்சம் ரொக்க தொகையை பறிகொடுத்த மனோகரன் என்பவரிடம் ஒப்படைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காவல்துறையினருக்கு பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தாரும் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.