கந்து வட்டி, மற்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல்நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவகங்கையில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேட்டி.

144

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.மேலும்,
சமூக வளைதளங்கள், முகநூல் போன்றவற்றில் பெண்களின் படத்தை ஆபாசமாக பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த காவல் கண்காணிப்பாளர்,அப்படி பதிவிட்டால், ஆன்லைன் வாயிலாகவோ, என்னிடம் நேரிலோ புகார் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
அப்படி பதிவிடப்படும் பெண்களின் புகைப்படத்தை முகநூல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு 24 மணி நேரத்திற்குள் அழிக்க முடியும் என்றும்,அதனால் பெண்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், எந்தவித தவறான முடிவிற்கும் செல்ல கூடாது என்றும், வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here