கடத்தப்பட்ட சிறுமியை மீட்ட தனிப்படை போலீசாருக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு

170

தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஏமாற்றி கடத்திச் சென்றார். இந்த வழக்கில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் தலைமையிலான தனிப்படையினர் கடத்தப்பட்ட சிறுமியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சிறுமியை கேரள மாநிலத்தில் மீட்ட போலீசார், கடத்திச் சென்ற நபரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கடத்தப்பட்ட சிறுமியை பத்திரமாக மீட்ட தனிப்படையினரை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பாராட்டி வெகுமதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here