Home சினிமா காஸ்ட்லி பைக்கை திருடி வெளியூர்களில் விற்போம்” : சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்! சென்னையில் பைக் திருடிவந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

காஸ்ட்லி பைக்கை திருடி வெளியூர்களில் விற்போம்” : சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்! சென்னையில் பைக் திருடிவந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

0
காஸ்ட்லி பைக்கை திருடி வெளியூர்களில் விற்போம்” : சிறுவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்! சென்னையில் பைக் திருடிவந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை குமரன் நகர் பகுதியில் கே.டி.எம் பைக் ஒன்றை மூன்று பேர் திருடிச் செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அசோக் நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திருடிய வாகனத்தோடு வந்த மூன்று பேரை போலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

அப்போது, இரண்டு பேர் போலிஸில் சிக்காமல் தப்பிச் சென்றுவிட்டனர். ஒருவரை மட்டும் போலிஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் 18 வயது கூட ஆகாத சிறுவன் என்பது தெரியவந்தது.

சென்னையின் கிண்டி, சைதாப்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விலை உயர்ந்த வாகனங்களைத் திருடிச் சென்று, வெளியூர்களில் விற்றுவிடுவோம் என சிறுவன் கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

சிறுவனிடம் நடத்திய விசாரணையில் தப்பிச் சென்றவர்கள் ராபர்ட், ஜான் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பைக் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் சிறுவனை போலிஸார் கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here