
நெல்லையில் பழிக்குப் பழியாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனால், நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி விருதுநகர் ராமநாதபுரம் தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட
1500 போலீசார் குற்ற சம்பவங்கள் தடுக்கும் வகையில் நெல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மதுரை தென் மண்டல போலீஸ் ஐஜி அன்பு நெல்லைக்கு வந்து போலீஸ் அதிகாரிகளுடன் சட்ட ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுபோக, 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள்,
கூடுதல் சூப்பிரண்டுகள்,
துணை சூப்பிரண்டுகள் கிராமப்பகுதிகளில் வலம் வந்து பாதுகாப்பு பணியை கண்காணித்து வருகின்றனர்.