
தமிழக காவல் துறை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ் குமார்,இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், வேலூர் சரக துணை காவல்துறை தலைவர் திரு.A.G.பாபு,இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடத்திய சிறப்பு அதிரடி சோதனையில் திருவண்ணாமலை நகர உட்கோட்டத்தில் 20 சரித்திர பதிவேடு குற்றவாளிகள், திருவண்ணாமலை கிராமிய உட்கோட்டத்தில் 07 சரித்திர பதிவேடு குற்றவாளிகள், போளூர் உட்கோட்டத்தில் 09 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், வந்தவாசி உட்கோட்டத்தில் 03 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், செய்யாறு உட்கோட்டத்தில் 07 சரித்திரப் பதிவேடு பெற்றவர்கள், செங்கம் உட்கோட்டத்தில் 07 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ஆரணி உட்கோட்டத்தில் 17 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட மாவட்டம் முழுவதும் 71 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்து பட்டனர்.