
ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
பெண் காவல் துறை கண்காணிப்பாளருக்கு ஐஜி முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் புகார் அளிக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் ஐஜி முருகன் லஞ்ச ஒழிப்பு துறை இணை இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அப்போது தன்னுடன் பணிபுரிந்த பெண் காவலர் பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரில் அப்போதைய அதிமுக அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் விசாரணை நடந்தால் தனக்கு நீதி கிடைக்காது என்றும் முருகன் செல்வாக்கான பதவியில் இருப்பதால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் பெண் எஸ்பி தரப்பில் முறையிடப்பட்டது .பெண் எஸ் பி யின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றியது.இந்த சூழலில் ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கில் தெலுங்கானாவுக்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது . கடந்த 23ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாறியுள்ளதால் வழக்கு விசாரணை இங்கு நடந்தால் நியாயம் கிடைக்கும் என புகார்தாரர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் ஐஜி முருகன் மீதான பெண் எஸ்பி பாலியல் புகார் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மாறியுள்ளதால் வழக்கு விசாரணை இங்கு நடந்தால் நியாயம் கிடைக்கும் என புகார்தாரர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில் ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.