
திருவண்ணாமலை ;
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளார் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கி.பாரதி அவர்களின் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களுடன் சைபர் குற்றங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வங்கி மேலாளர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சைபர் குற்றங்கள் நடைபெறவதை தடுக்கும் பொருட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கு தொடர்பாக தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP-யை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்றும், ATM-ல் பணம் எடுக்க வரும்போது அன்னியநபர்களின் உதவியை கோரவண்டாம் என்றும் போன்ற பல்வேறு ஆலோசைகளை வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்துமாரு கேட்டுக்கொள்ளப்பட்டது. வங்கி ஊழியர்கள் தங்களுக்குள் ஒரு Whatsapp குழுவை ஏற்ப்படுத்தி வங்கியில் நடக்கும் மோசடிகள் குறித்து தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுமாறும், காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அறிவுத்தப்பட்டது.