போலி பட்டா, வாரிசு சான்றிதழ்
பல லட்சம் மதிப்பிலான நிலம்
அபகரிப்பு; 2பேர் சிறையில் அடைப்பு

105

திருவொற்றியூர், செப்,30- சென்னை, மணலி பகுதியில், பல லட்சம் மதிப்பிலான நிலத்திற்கு,போலி பட்டா மற்றும் வாரிசு சான்றிதழ் வாங்கி அபகரிக்கு முய்றசித்த வழக்கில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்,

சென்னை, மணலி, காமராஜர் சாலையை சேர்ந்த துரைக்கண்ணு மகன் காமர்ரஜ்(56), இவருக்கு, பாடசாலை பகுதியில், பல லட்சம் மதிப்பிலான சொந்த நிலம் உள்ளது, இந்த நிலத்திற்கு, சுகுணா தேவி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் , போலி பட்டா மற்றும் வாரிசு சான்றிதழ் வாங்கி, அதை, அம்பத்தூர் பதிவு அலுவலகத்தில், சர்வே எண்ணை மாற்றி நிலத்தை அகபரிக்க முயற்சித்தனர், பின்னர், அனைத்து போலி ஆவணங்களை தயார் செய்து, காமராஜ் நிலத்தில் அமர்ந்து, 10 பேர் கொண்ட கும்பலுடன் மிரட்டினர், இது தொடர்பாக, காமராஜ், மணலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்,இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் வழக்கு பதிவு செய்து, தீவிர புலன் விசாஅரணை நடத்தியதில், சுகுணா தேவி, சுப்பிரமணி ஆகியோர், போலி ஆவணம் மூலம் , காமராஜ் நிலத்தை அபகரிக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டன, மேலும், விசாரணை நடத்தி, இதற்கு மூளையாக செயல்பட்ட மணலி, ஆமுல்லைவாயலை சேர்ந்த ராஜகோபால்(62), சுப்பிரமணி மகன் செந்தமிழ் வாணன்(33) அகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், இந்த வழக்கில், சுகுணா தேவி, சுப்பிரமணி ஆகியோர் முன் ஜாமீன் வாங்கியது குறிப்பிடத்தக்கது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here