Home தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் முனைவர் பிரதீப் V.பிலிப், இ.கா.ப அவர்கள் பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

காவல்துறை இயக்குநர் முனைவர் பிரதீப் V.பிலிப், இ.கா.ப அவர்கள் பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

0
காவல்துறை இயக்குநர் முனைவர் பிரதீப் V.பிலிப், இ.கா.ப அவர்கள் பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் முனைவர் பிரதீப் V.பிலிப், இ.கா.ப (Training) அவர்கள் இன்று (30.9.2021) பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டு, காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல் துறை தலைமை இயக்குநர் திரு.C.சைலேந்திரபாபு, இ.கா.ப, அவர்கள் பணி ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குநர் முனைவர் பிரதீப் V.பிலிப் , இ.கா.ப அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். 

  இந்நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குநர்கள் திரு.ஷகில் அக்தர், இ.கா.ப, (CBCID), திரு.சுனில்குமார் சிங், இ.கா.ப, (Prison) திரு.B.K.ரவி, இ.கா.ப (EB Vigilance), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here