Home தமிழ்நாடு திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் 36000 ரூபாயை தவறவிட்ட பெண் : உரிய நபரிடம் ஒப்படைத்த போலீசார்.

திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் 36000 ரூபாயை தவறவிட்ட பெண் : உரிய நபரிடம் ஒப்படைத்த போலீசார்.

0
திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் 36000 ரூபாயை தவறவிட்ட பெண் : உரிய நபரிடம் ஒப்படைத்த போலீசார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் உசேன் அம்பலம் தெருவைச் சேர்ந்த அனிதா என்பவர் தனது கட்டைப்பையில் ரூபாய் 36000 பணத்தை வைத்து திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் தவறவிட்டார், இதனையடுத்து கண்டரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த ஜீவிதா என்பவர் தவறவிட்ட பையை எடுத்து திருப்புத்தூர் தலைமை காவலர் அரசு என்பவரிடம் கொடுத்ததை தலைமை காவலர் மலையரசு திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சேது மற்றும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்க கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து பணத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை செய்ததில் விசாரணையில் திருப்புத்தூர் உசேன் அம்பலம் தெருவை சேர்ந்த அனிதா என்பது தெரியவந்தது இதனை அடுத்து அவரிடம் ரூபாய் 36 ஆயிரத்தை திருப்புத்தூர் காவல் ஆய்வாளர் சேது மற்றும் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here