தமிழகம் முழுவதும் 35 இடங்களில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளில் கொள்ளையடித்த கொள்ளையன் மயிலாடுதுறையில் கைது!

170

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பூட்டியிருந்த கடைகளின் பூட்டை உடைத்து ஹெல்மெட் மாட்டியபடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று காவலர்கள் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அந்த நபருடைய பெயர் லட்சுமணன் என்பதும் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேற்கொண்ட விசாரணையில் கும்பகோணம் பொள்ளாச்சி திருப்பூர் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழகம் முழுவதும் இவர் மீது 35 வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன். அவரை கைது செய்து காவல்துறையினர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here