திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டு பெட்டிகள் வைத்துள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார்

114

திருப்பத்தூர் மாவட்டம்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ஆலங்காயம் மாதனூர் ஆகிய ஆறு ஒன்றியங்களில் மாதனூர் ஆலங்காயம் தவிர்த்து மீதமுள்ள 4 ஒன்றியங்களுக்கு மட்டும் கடந்த ஆறாம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில் வாக்காளர்கள் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு பதிவு செய்த ஓட்டுச்சீட்டு சேகரிக்கப்பட்ட பெட்டிகளை கந்திலிக்கான வாக்குச்சீட்டு பெட்டிகள் கெஜல்நாயக்கன்பட்டி அரசு பள்ளியிலும், திருப்பத்தூருக்கான வாக்குச்சீட்டு பெட்டிகள் குரிசிலாபட்டு அடுத்த வடுக முத்தம்பட்டி அரசு பள்ளியிலும், நாட்றம்பள்ளிக்கான வாக்குச்சீட்டு பெட்டிகள் நாட்றம்பள்ளி அரசு பள்ளியிளும் ஜோலார்பேட்டை க்கான வாக்குச்சீட்டு பெட்டிகள் அக்ரஹாரம் பாலிடெக்னிக் கல்லூரியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் ஆகியோர் வாக்குச்சீட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ஆய்வு பணி மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here