10 மாவட்ட காவலர்களின் மனக்கவலைகளை போக்கும் விதமாக குறைகளை நேரில் கேட்டறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.

185

18.10.2021.
உங்கள் துறையில் முதல்வர் திட்டம் தொடர்பான காவல்துறையினர் குறைகேட்பு முகாம் தென்மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு T.S. அன்பு IPS. அவர்களால் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று 18.10.2021 நடத்தப்பட்டது.இதில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாநகரம் மற்றும் மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் நேரடியாக ஒவ்வொரு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் பணியிடமாறுதல், ஊதிய முரண்பாடு, பதவி உயர்வு மற்றும் துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான குறைகளை கேட்டு அவர்களிடமிருந்து 643 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது தகுந்த பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here