முக்கிய செய்திகள் சில!

71

சென்னை: சென்னையில் நம்பர் பிளேட்டில் தேவையற்ற வாசகங்களை பொருத்திய 2 காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரசு நிர்ணயித்த அளவுக்கு மேல் வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்திய 1,892 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: மனித உரிமை பெயரை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும என டிஜிபி சைலேந்திரபாபு ஆணையிட்டுள்ளார்.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மனித உரிமை பெயரில் வாகனங்களில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறினார்.

அமெரிக்கா: அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக சமூக வலைத்தளத்தை தொடங்கினார்.

தனது ட்ரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் TRUTH SOCIAL என்ற வலைதளத்தை ட்ரம்ப் தொடங்கினார்.

ஆப்பிள் ஸ்டோரில் TRUTH SOCIAL APP வெளியிடப்பட்ட நிலையில் பீட்டா பதிப்பு நவம்பரில் வெளியிடப்படுகிறது.

கோவை: கோவை மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

கனமழை, பலத்த காற்று காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here