
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் பொதுமக்களின் நலன்கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து சந்திரன் தலைமையிலான மீட்பு பணியாளர்கள் பொதுமக்கள் சங்கமிக்கும் இடங்கள், புதிய பேருந்து நிலையம், போளுர் சாலை, அரசு தலைமை மருத்துவமனை போன்ற இடங்களில் எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு விபத்தில்லா தீபாவளி கொண்டாட வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.