கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சாட்சிகளை கலைத்ததாக ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் கைது

64

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனகராஜ் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கனகராஜின் சகோதரர் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்து காவல்துறை மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here