புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் கூடும் இடங்களில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

103

தமிழகத்தில் சமீப காலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது குறிப்பாக ஏடிஎம் பின் நம்பர் கேட்டு மர்ம நபர்கள் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும் போது விவரம் அறியாதவர்கள் ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண்ணை கொடுத்து விடுவதால் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் எடுத்துக் கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இதேபோன்று அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின் அஞ்சல்கள் குறுஞ்செய்திகள் மூலமாகவும் மோசடி நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதால் அதுபோன்ற செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க கூடாது, ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண்ணை யாருக்கும் கொடுக்க கூடாது என்பதை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், முக்கிய கடைவீதிகள், கல்லூரி ஆகியவற்றின் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம் காவல் நிலையம் காவலர்கள் பவித்ரா மற்றும் பரிமளா ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பொதுமக்களிடம் தொலைபேசியில் யாராவது அழைத்து ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டால் கொடுக்க கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை மின்னஞ்சல்களையும் திறந்து பார்க்கக் கூடாது, முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டாம், ஏடிஎம் மெஷினில் இருந்து பணம் எடுக்கும்போது முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணத்தை எடுக்க சொல்லக் கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here