Home தமிழ்நாடு செங்கம் அருகே 100க்கும் மேற்பட்டவர்கள் சீக்கி உயிருக்கு போராடியவர்களை வட்டாட்சியர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் உயிரை பணையம் வைத்து பாதுகாப்புடன் மீட்பு!

செங்கம் அருகே 100க்கும் மேற்பட்டவர்கள் சீக்கி உயிருக்கு போராடியவர்களை வட்டாட்சியர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் உயிரை பணையம் வைத்து பாதுகாப்புடன் மீட்பு!

0
செங்கம் அருகே 100க்கும் மேற்பட்டவர்கள் சீக்கி உயிருக்கு போராடியவர்களை வட்டாட்சியர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் உயிரை பணையம் வைத்து பாதுகாப்புடன் மீட்பு!

செங்கம் அடுத்த குப்பநத்தம் அணை அருகே உள்ள மேற்கு ஜவ்வாதுமலை நாமக்கல் ஓடை ராட்சத நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கால் தீபாவளி தினத்தை முன்னிட்டு சுற்றுலா சென்ற 100க்கும் மேற்பட்டவர்கள் சீக்கி உயிருக்கு போராடியவர்களை வட்டாட்சியர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் உயிரை பணையம் வைத்து பாதுகாப்புடன் மீட்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை அடிவாரத்திலுள்ள குப்பநத்தம் அணை அருகே மேற்கு ஜவ்வாது மலை உள்ள நாமக்கல் ஓடை ராட்சத நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ள பெருக்கில் தீபாவளியை முன்னிட்டு சுற்றுலா சென்ற சுற்றுப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மது அருந்திவிட்டு சிக்கி உயிருக்கு போராடியவர்களை வட்டாட்சியர் முனுசாமி தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய போக்குவரத்து அலுவலர் சந்திரன் தலைமையிலான மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்தில் உள்ள வனப்பகுதிக்கு விரைந்து சென்று அனைவரையும் பாதுகாப்புடன் மீட்டெடுத்தார்கள்.

மேலும் நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டெடுக்க சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு நிலையத்திற்கு வழங்கிய டாப் போன் மற்றும் சண்முகம், சுரேஷ் ஆகிய இரண்டு மீட்பு பணியாளர்கள் நீர்வீழ்ச்சி விழுந்து காயம் ஏற்பட்டவுடன் டாப் போன் உடைந்து சேதம் ஏற்பட்டதுடன் வனப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து எதிர்பாராதவிதமாக குப்பநத்தம் அணைக்கு சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திடீரென சூழ்ந்ததால் துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையிலான காவல்துறையினர் சார்பில் பொது மக்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்படுத்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here