
திருச்சி மண்டல காவல் துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவண சுந்தர் இ.கா.ப., அவர்களின் அறிவுறித்தலின்படியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதல்படியும், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்(CWC) திரு. ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மற்றும் 14.11.2021ஆம் தேதி இன்று புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள பொன்சரவணன் தனியார் திருமண மஹாலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC), நகர காவல் ஆய்வாளர் திரு. குருநாதன், வழக்கறிஞர் திருமதி. பர்வீன் பானு ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 250 அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.