திருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…

505

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றியவர் பூமிநாதன் (56).

நேற்றிரவு ரோந்து பணியில் இருந்த பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் 3 டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தினார். அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர்.

ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொண்ட எஸ்ஐ பூமிநாதன் அவர்களை டூவீலரில் விரட்டி சென்றார்.. அந்த ஆசாமிகள் திருச்சி- புதுக்கோட்டை மெயின்ரோட்டில் மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது ஓரு டூவீலரை தடுத்து நிறுத்திய எஸ்ஐ பூமிநாதன் அதில் இருந்த 2 திருடர்களை பிடித்தார்.

இதனைத் தெரிந்து கொண்ட மற்ற 2 டூவீலர்களில் சென்ற நபர்கள் திரும்பி வந்து பூமிநாதனிடம் தங்களது சகாவை விடுமாறு கூறியுள்ளார். ஆனால் பூமிநாதன் முடியாது என கூற அவர்கள் வைத்திருந்த அரிவாளல் வெட்டினர். படுகாயமடைந்த எஸ்ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார். திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் சுமார் 5 மணியளவில் தான் அவ்வழியாக நபர்கள் மூலம் தெரியவந்தது. ஆடுத்திருடர்களை பிடிக்க முயன்ற எஸ்ஐ வெட்டிக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here