
திருச்சி நவ 22
திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். நேற்று அதிகாலை ஆடு திருடிச் சென்ற நபர்களை மடக்கி பிடித்தார். அப்போது ஆடு திருடும் கும்பலை சேர்ந்த இருவரை மடக்கி பிடித்து விட்டதாக நவல்பட்டு ஏட்டு சேகரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேலும் சிலர் அந்த இடத்திற்கு வந்து பூமிநாதனை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து காலை
5மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் காவல்துறை சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்த பின்னர் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக காவல்துறை அதிகாரிகள் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் உடல் திருச்சி திருவெறும்பூரில் உள்ள சோழமாதேவி கல்லறையில் காவல்துறை மரியாதையுடன்
30குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்தனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளி
உடனடியாக
கைது செய்வதற்காக 8 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். பூமிநாதன் கொல்லப்படும் சில நிமிடங்களுக்கு முன்பு ஏட்டு சேகரிடம் கைபேசி மூலம் பிடிபட்ட நபர்கள் தேனீர்பட்டி என தெரிவித்ததாக கூறினார். இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் உடனடியாக தஞ்சை மாவட்டம் தேனீர்பட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டன். மேலும், பூமிநாதனின் பின்தலையில் கறி வெட்டும் அரிவாள் கொண்டு வெட்டப்பட்டு உள்ளதால் கறிக்கடை தொடர்புடைய நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என யூகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், நேற்று அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை கொலை நடைபெற்ற சம்பவத்தின் பகுதிகளில் செல்போன்களின் மூலம் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது
2செல்போன்கள் சம்பவ இடத்தில் இருந்து புதுக்கோட்டை- பொன்னமராவதி இடைப்பட்ட பகுதியில் பேசப்பட்டது தெரியவந்தது. இதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் நேற்று மதியம் அப்பகுதிக்கு சென்றனர். தனிப்படை காவல்துறையினர் சென்றபோது அந்த செல்போனில் இணைப்புகள் செயல்படாததால் தடுமாறிய காவல்துறையினர்
தொடர்ந்து விசாரணையில் இன்று அதிகாலை
3மணியளவில்
கொலையில் ஈடுபட்ட
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 2சிறுவர்கள் உட்பட நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர் . இவர்கள் திருச்சி மாவட்டம்,
கல்லணையை அடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்த நபர்கள் என்பதும் இவர்கள் தொடர்ந்து ஆடுகளை திருடுவதை தொழிலை செய்து வருவதை தனிப்படை போலீசாருக்கு
தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட
4பேரும் தற்போது திருச்சியில் ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கைது செய்யப்பட்டவர்கள் இன்று காலை கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Trichy JK
9894920886