
கிளீனர்கள் இன்றி லாரிகளை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பாயும் என திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தாண்டு நடந்த சாலை விபத்துக்களில் 39 விபத்துக்கள் லாரிகளால் ஏற்பட்டுள்ளன.
இதில் 19 விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த சம்பவங்களில் ஒரு சம்பவத்தில் மட்டுமே லாரிகளில் ஓட்டுநருடன் கிளீனர் இருந்துள்ளார்
எனவே கிளீனர்கள் இல்லாததே லாரி விபத்துக்கள் நடக்க காரணம் என காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் பிறப்பித்துள்ள உத்தரவு :
ஓட்டுநருடன் லாரிகளில் கிளீனர்கள் இருந்தால் லாரிகளை பின்னோக்கி நகர்த்தும் போது இடது வலது பார்த்து மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படாமல் இருக்க உதவி செய்வர்
தூக்க மிகுதியால் ஓட்டுனர் வாகனத்தை இயக்க சிரமப்படும்போது அவர்களை எச்சரித்து கவனமாக செல்ல உதவுவர்.
முன்பு கிளீனர்கள் பணி செய்யும் போது அனுபவத்தின் அடிப்படையில் பணியை கற்று கொண்டு லாரிகளை இயக்கவும் செய்வார்கள்.
கிளீனர்கள் இருந்ததால் தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி சம்பவமும் தடுக்கப்பட்டு வந்தன.
ஆனால் சமீபகாலமாக கிளீனராக பணியாற்றிய அனுபவம் இன்றி நேரடியாக ஓட்டுநர் உரிமம் பெற்று வருபவர்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மோட்டார் வாகன விதிகள் 174ன் படி தேசிய அனுமதி பெற்ற லாரிகளில் இருவர் ஓட்டுநர்களாக கட்டாயம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனவே ஓட்டுநர்களுடன் கண்டிப்பாக கிளீனர்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசாருக்கு உத்தரவிப்பட்டுள்ளது
வரும் காலங்களில் கிளீனர்கள் இன்றி ஓட்டுநர்கள் லாரிகளை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பத்தியப்படும்
இவ்வாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்