Home Uncategorized சாம்பியன் பட்டத்தை வென்ற புதுக்கோட்டை மாவட்ட வீரர்களுக்கு பாராட்டு

சாம்பியன் பட்டத்தை வென்ற புதுக்கோட்டை மாவட்ட வீரர்களுக்கு பாராட்டு

0

புதுக்கோட்டையைச் சேர்ந்த சிலம்பாட்ட வீரர்கள் வீராங்கனைகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர் !! புதுக்கோட்டையைச் சேர்ந்த புத்தாஸ் வீர கலைக் கழக சிலம்பாட்ட வீரர்கள் வீராங்கனைகள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில்,தமிழக மக்கள் மன்றத்தினால்,
சார்பில் நடத்தப்பட்ட சிலம்பாட்டப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்,வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கும் ,பாராட்டுக்கூட்டம்திலகர் திடலில் உ ள்ள பாரி நர்சரி & பிரைமரி பள்ளியில் நடைபெற்றது ,இவ்விழாவில்புத்தாஸ் வீர கலைக் கழகத்தின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அஸ்வின் குமார் தலைமைவகித்தார் அண்ணா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி துறை துணை இயக்குனர் முனைவர் கே.ஏ. ரமேஷ், முன்னிலை வகித்தார் சிலம்ப ஆசிரியர் சேது கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்ஹீரோ மோட்டார்ஸ் ஷோரூம் ,எ ஸ் வி எ ஸ் .ஜெயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலிடம்பெற்ற ,வீர,வீராங்கனைகள் புகழரசன்,கிஷோர், சூர்யா,திரிஷா , ஆதிஷ் , பரத் சஞ்சய் ,ஹரிகரன்,யோகேஷ் ஜெயபூரணி , லக்ஷவர்தினி , இரண்டாம் இடம்பெற்ற ,வீர,வீராங்கனைகள்,ஜெய் ஆதர்ஸ் வேல் , ஸ்ரீராம் நித்திஷ் , ஹாசினி ஸ்ரீ , கலைச்செல்வி , கலைமுகிலன் மூன்றாம் இடம்பெற்ற நேத்ரா ஸ்ரீ நித்திய பிரியதர்ஷினி நித்திஷ் சுபஸ்ரீ ஆனந்த் பர்வேஸ் தருண் பிரித்வி ஹரி ஆகியோருக்கு நற்சான்றுகளை வழங்கி பேசுகையில் தமிழக அரசு சிலம்ப விளையாட்டிற்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு எண்ணிலடங்கா ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்வதோடு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று அரசு அறிவித்துள்ள சிலம்பத்திற்கான சலுகைகளை பெற்று நலமோடு வாழ வாழ்த்துகிறேன் என்று கூறினார் , இவ்விழாவில் பாரி நர்சரி பள்ளியின் தாளாளர் செல்வி, மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்நன்றிகூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here