திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் மெச்சத் தகுந்த காவல் பணிக்கான குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

459

இவர் தருமபுரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியபோது, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் போலி மதுவை ஒழித்தார்.
காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற பின், சென்னையில் திருவல்லிக்கேணி, புனித தோமையர் மலை, தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் காவல் துணை ஆணையராகவும், கடலூர் மாவட்டம் மற்றும் சென்னை தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். இவர் துணை ஆணையாளராக சென்னை பெருநகரத்தில் பணியாற்றிய 2012 முதல் 2018 வரையிலான காலத்தில் சுமார் ஆயிரம் வழக்குகளில் திருடப்பட்ட 3 ஆயிரத்து 500 பவுன் நகைகளை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தேடி கொடுத்துள்ளார்.
தியாகராயநகர் காவல் துணை ஆணையராக பணியாற்றியபோது, 2014-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, தனது குழுவினருடன் சேர்ந்து கடுமையாகப் பணியாற்றி பொது மக்களில் பலரை மீட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது, சட்டவிரோத மணல் கடத்தலைக் கட்டுப்படுத்தியதுடன், சாலை விபத்துக்களையும் கணிசமாக குறைத்துள்ளார்.
தனிப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் கண்காணிப்பாளராக இவர் பணிபுரிந்தபோது, கோவிட்-19 பெருந்தொற்றின்போது, இவர் அளித்த தகவல்கள், வைரஸ் அதிகமாக பரவுவதை தடுத்ததில் பெரும் உதவியாக அமைந்தன.
2021 சட்டமன்ற தேர்தலின்போது இவர் சிந்தையில் உதித்த தேர்தல் கைபேசி செயலி நல்ல முறையில் தேர்தல் நடைபெற உதவிப் புரிந்தது.

மேற்கண்டபடி சிறப்பாக பணியாற்றியமைக்காக இப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here