
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரனுக்கு கடந்த 25 ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் தான் தலைமைச் செயலகத்தில் உள்துறை டிஎஸ்பியாக இருப்பதாகவும், திருத்தணி சட்டமன்ற தொகுதி பிரச்சினை தொடர்பாக புகார் வந்து இருப்பதாகவும், அந்த புகார் கையில் எடுத்தால் தங்கள் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால் அந்த புகாரை கையில் எடுக்காமல் இருக்க ரூ. 25 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என அந்த நபர் அவரை மிரட்டியுள்ளார். அதற்கு சட்டமன்ற உறுப்பினர் என்ன புகார் என்று திருப்பி கேட்டதற்கு புகார் என்னவென்று சொல்ல முடியாது எனவும், நேரடியாக பணத்தை கொடுத்தால் புகார் பற்றி சொல்லப்படும் எனவும் அந்த மர்ம நபர் கூறியுள்ளார். மேலும் இந்தப் பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாது என்றும், என்னால் மட்டும் தான் முடியும் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து 27 ஆம் தேதி அன்று நான் சொல்லும் இடத்திற்கு பணத்தை கொண்டு வந்தால் உங்களை காப்பாற்றி கொள்ளலாம் என்றும் மிரட்டியுள்ளார் . அதன்படி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயனிடமும் புகார் வந்திருப்பதாகவும் அவரை பணம் கொடுக்க முடிவு செய்து இருப்பதாகவும் அந்த மிரட்டல் கும்பல் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரனிடம் தெரிவித்துள்ளது. அதற்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயனை தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு மிரட்டல் வந்தது அதை நான் பார்த்து கொள்வதாகவும் கூறி அவர் போனை வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் அந்த நபர்கள் மீது திருத்தணி காவல் நிலையத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் புகார் அளித்தார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காமிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில்
திருத்தணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த நபர்களை திரு்த்தணியில் உள்ள ஜிஆர்டி கல்லூரி அருகே வரவழைத்து பணத்திற்கு அடியில் வெள்ளை தாள்களை வைத்து பணத்தை திருத்தணி சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளரை கொடுக்க வைத்துள்ளனர். பணம் கொடுக்க முயன்றபோது அவரை சுற்றிவளைத்து காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்றும் அவருடைய மனைவி யசோதா என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் தலைமைச் செயலகத்தில் டிஎஸ்பி ஆக இருப்பது போன்று போலியாக ஐடி கார்டு,வைத்திருந்ததையும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பணம், கார் ஆகியவற்றையும்
காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திருத்தணி காவல் நிலையத்திலிருந்து காரில் கொண்டு செல்ல காவல் துறையினர் தயாராகி கொண்டிருந்ததை செய்தியாளர்கள் வீடியோ எடுத்தபோது அப்போது அங்கு வந்த காவலர் வீடியோ எடுக்க கூடாது என்று செய்தாயாளர்களை மிரட்டியுள்ளார். தொடர்ந்து வீடியோ எடுக்கவே கேமிராவை தட்டி விட்டு சென்றதால் செய்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்திகளை மக்களிடத்தில் தெரியபடுத்துவதே கடைமையாக கொண்டு செயல்படும் செய்தியாளர்களுடைய பணியை தடுத்து தங்கள் கடைமைகளை முறையாக செயல்படுத்துகிறோம் என கூறும் ஒரு சில காவல்துறையினர் திருத்தணியில் சட்ட விரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனை, கள்ளசந்தையில் மதுவிற்பனை, குட்கா போன்ற முறைகேடான வியாபரங்களை தடுக்க இவர்களுடைய கடமையை செயல்படுத்தி திருத்தணி காவல்நிலையத்திற்க்குப்பட்ட பகுதிகள் அனைத்தும் சமுக விரோத செயல்பாடு அற்ற பகுதியாக மாற்றி அவர்களுடைய கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவருவார்களா என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது…