Home தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களுக்கு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது!

புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களுக்கு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது!

0
புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களுக்கு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது!

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவுபடி, புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களுக்கு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தாலுகா மட்டும் ஆயுதப்படையில் 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 08.03.2022 ஆம் தேதியன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த பதிவுக்கான பொது தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 07.04.2022ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் இந்த பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், அவர்களுக்கு உதவும் வகையிலும், இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் 6 மணி வரை செயல்படுகிறது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நேரிலோ அல்லது 9498181223, 9498123859 & 9498160107 என்ற செல்போன் எண்களிலோ தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here