Home தமிழ்நாடு ஒருமாதம் ‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்த வேண்டும் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

ஒருமாதம் ‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்த வேண்டும் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

0
ஒருமாதம் ‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்த வேண்டும் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

சென்னை,
டிஜிபி சைலேந்திரபாபு போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

டிசம்பர் 2021 – ஜனவரி 2022-ல் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக ‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்த வேண்டும். இந்த நடவடிக்கையை இன்று முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரை, ‘ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் தொடர வேண்டும். பள்ளி, கல்லுாரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும். கடத்தல், பதுக்கல், விற்பனை சங்கிலி தொடரை உடைக்க வேண்டும்.

தொடர்ந்து கஞ்சா, போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ரயில்வே போலீசார், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கைப்பற்ற வேண்டும். போதை பொருள் விற்பவர்கள் பின்னணியில் இருப்பவர்களை கண்காணிக்கும் பொறுப்பை காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இப்பணிகளை, மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. கண்காணித்து கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். சென்னை, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள், போதை பொருள் ஒழிப்பு பணியில் நேரடியாக கவனம் செலுத்தி அறிக்கை தர வேண்டும். கஞ்சா, குட்கா பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here