
வத்தலகுண்டுவில்
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காந்தி நகரைச் சேர்ந்தவர் விவேகானந்தன் இவர் தேனியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியாக பணிபுரிகிறார் இவர்மீது பல்வேறு புகார்கள் வந்ததைதொடர்ந்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் வத்தலக்குண்டு காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத் துறையை சேர்ந்த ஐந்து பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் இதனால் இந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது