Home தமிழ்நாடு நளினிக்கு தொடர்ந்து 4-வது முறையாக விடுப்பு நீட்டிப்பு!

நளினிக்கு தொடர்ந்து 4-வது முறையாக விடுப்பு நீட்டிப்பு!

0
நளினிக்கு தொடர்ந்து 4-வது முறையாக விடுப்பு நீட்டிப்பு!

வேலூர் மாவட்டம்

செய்தியாளர் டேவிட்

நளினிக்கு தொடர்ந்து 4-வது முறையாக விடுப்பு நீட்டிப்பு

வேலூர் மாவட்டம்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருபத்தி ஆறு வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறார்

அவர் அவருடைய தாயார் பத்மாவதிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார்

இதனடிப்படையில் கடந்த 2021 ஆண்டு டிசம்பர் 27ம் தேதி அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது

தொடர்ந்து அவருக்கு ஒரு மாதம் விடுப்பு என மூன்று முறை வழங்கப்பட்டது

இன்று விடுப்பு முடிந்து சிறைக்கு செல்ல வேண்டிய நளினிக்கு

மேலும் ஒரு மாத கால விடுப்பு வழங்கப்பட்டுள்ளது

27.4.2022 முதல் 26.5.2022 வரை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது

இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்

இவருக்கு சூழற்ச்சி முறையில் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்

மேலும் இவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகள் ஆவது

இவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்க கூடாது என்பதும் தினமும் காட்பாடி காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது

இதனடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தினமும் அழைத்துச் செல்லப்பட்டு அவர் காட்பாடி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here