Home தமிழ்நாடு குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்!

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்!

0
குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்!

காவல் கண்காணிப்பாளர், திரு.ராஜேஷ்கண்ணன் இ கா ப வேலூர் மாவட்டம் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 02.05.2022 காலை 11.30 மணிக்கு குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 750 நபர்களுக்கு பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக சைபர் கிரைம் போலீசார் மூலம் இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏடிஎம் கார்டை மாற்றி பணம் பறிப்பது பற்றியும், ஏடிஎம் கார்டு மற்றும் ஒடிபி மற்றும் வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, ஆன்லைன் விளையாட்டு குறித்தும் மேலும் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், காவல் உதவி செயலி யின் முக்கியத்துவம் குறித்தும் தெரிவிக்கப்பட்டு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரமூர்த்தி அவர்களால் நிகழ்ச்சியில் சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here