
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி பகுதியில் சில மாதங்களாக அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்வதாக தகவலின் அடிப்படையில் திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் திருச்சுழி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜய்காண்டிபன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மது பாட்டில் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரிடம் இருந்த மது பாட்டிலை கைப்பற்றி கருப்பசாமி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது விசாரணையில் கருப்பசாமி என்னும் நபர் ம.ரெட்டியாபட்டி அருகே உள்ள திருமலைபுரம் ஊரை சேர்ந்த நபர் விற்பனை செய்வதாக கூறிய தகவலின் அடிப்படையில் ம. ரெட்டியாபட்டி காவல்நிலைய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்பொழுது திருமலை புரத்தை சேர்ந்த மூவேந்தன் வயது(33) அருப்புக்கோட்டையை சேர்ந்த முனியசாமி வயது (31) மதுரையைச் சேர்ந்த சந்தானம் வயது(32) ஆகிய நான்கு பேரிடமிருந்து 1300 க்கும் மேற்பட்ட வெளிமாநில மது பாட்டில்களை கைப்பற்றினர் அவர்கள் விற்பனைக்கு பயன்படுத்திய கார் மட்டும் இரண்டு சக்கர வாகனம் அனைத்தையும் ம. ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்