
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை செட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தவறவிட்ட 3 கிராம் தங்க மோதிரத்தை கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் உள்ள CCTV கேமராவின் உதவியால் உடன் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தும் இனிவரும் காலங்களில் இவ்வாறு கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என கந்தர்வகோட்டை காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்கள்..
கந்தர்வகோட்டை காவல் துறையினரின் இந்த நிகழ்வு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது!