Home தமிழ்நாடு ஆன்லைன் மூலமாக இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை!

ஆன்லைன் மூலமாக இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை!

0
ஆன்லைன் மூலமாக இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை!

ஆலங்குடியை சேர்ந்த சாகுல் அமீது என்பவர் ஆன்லைன் மூலமாக இழந்த பணத்தை மீட்க கோரியதன் பேரில் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு இழந்த பணத்தை உடனடியாக மீட்டு உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது பாராட்டுக்குரியதாக பார்க்கப்படுகின்றது.

புதுக்கோட்டை மாவட்ட காவல்த்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த சாகுல் அமீது என்பவர் கடந்த 25.08.2022-ம் தேதி yono app block ஆகி விடும் என்று தனது மொபைலுக்கு வந்த மெசேஜ்யை பார்த்து அதில் வந்த லிங்கில் தனது விபரங்களை பூர்த்தி செய்து
OTP எண்ணையும் பதிவு செய்ததால் இரண்டு தவணைகளாக மொத்தம் ரூ.1,18,617 (ரூபாய் ஒரு லட்சத்தி பதினெட்டாயிரத்து ஆறுநூற்று பதினேழு) பணத்தை இழந்துவிட்டார். இழந்த பணத்தை சாகுல் அமீது என்பவர் உடனடியாக தமிழ்நாடு காவல்துறை உதவி எண் 1930-யை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளார் வந்திதா பாண்டே உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு இழந்த பணத்தில் ரூ.98,765 தொகையை மீட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மூலம் உரிய நபரிடம் ஒப்படைத்தனர். மேலும் துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். மேலும் இது போன்ற பணமிழப்பு சம்மந்தமான சைபர் கிரைம் குற்றங்களுக்கு உடனடியாக தமிழ்நாடு காவல்துறை உதவி எண் 1930-என்ற Toll Free எண்ணை தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here