
திண்டுக்கல் : தென் மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் அறிக்கை: கஞ்சா, போதை வஸ்துகளால் ஏற்படும் உடல்,மனநல பாதிப்பு, சமுதாய பாதிப்பு குறித்து பொது மக்கள்,பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள், ஊர்வலங்கள், துண்டு பிரசுரங்களை போலீசார் வினியோகம் செய்துவருகின்றனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள் இளைஞர்களின்
எதிர்கால வாழ்வை பற்றி சிறிதும் கவலையின்றி வியாபாரத்தில் ஈடுபட முயற்சி செய்வதாக தகவல்கள் வருகின்றன.
பொது மக்கள் கஞ்சா விற்பனை பற்றிய தகவல்களை ஆக.29 முதல் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி 85258 52544 ல் தகவல் தரலாம்.
தகவல் கொடுப்பவர்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும் என, குறிப்பிட்டுள்ளார்.