
அமைச்சர் மீதான வழக்குகள் ரத்து
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியது, சட்டமன்ற தேர்தலின்போது அதிக வாகனங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஜனநாயகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.