Home COVID-19 தஞ்சாவூரில் குட்கா, விற்பனை; 109 கடைகளுக்கு சீல்!

தஞ்சாவூரில் குட்கா, விற்பனை; 109 கடைகளுக்கு சீல்!

0
தஞ்சாவூரில் குட்கா, விற்பனை; 109 கடைகளுக்கு சீல்!

தஞ்சாவூர்:- தஞ்சாவூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக மளிகை கடை, பெட்டிக்கடைகளில் சோதனை ஏற்கனவே நடத்தப்பட்டு 109 கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் விளக்கம் அளிக்காததாலும், அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததாலும் கடைகளை பூட்டி சீல் வைக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் படி தஞ்சை வடக்கு வீதியில் 2 கடைகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ். பி., ரவுளி பிரியா ஆகியோர் மேற்பார்வையில் தாசில்தார் மணிகண்டன், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சித்ரா மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதைத்தொடர்ந்து தஞ்சை மாநகரில் 9 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று 109 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here