Home தமிழ்நாடு புதுக்கோட்டையில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை களையெடுப்பு பணியில் எஸ் பி தனிப்படை போலீசார் தீவிரம்!

புதுக்கோட்டையில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை களையெடுப்பு பணியில் எஸ் பி தனிப்படை போலீசார் தீவிரம்!

0
புதுக்கோட்டையில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை களையெடுப்பு பணியில் எஸ் பி தனிப்படை போலீசார் தீவிரம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை களை எடுக்கும் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வந்திதா பாண்டே ஐபிஎஸ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.. கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் , அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர் என குற்றச் செயலில் ஈடுபடுவர் என கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர் இதற்கிடையில் ரூபாய் 34 லட்சம் மதிப்புள்ள குட்கா ஹான்ஸ் பொருட்கள் பறிமுதல் இருவர் கைது செய்தனர்..

புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக தனிப்படை பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மச்சுவாடி என் ஜி ஓ காலனி பகுதியில் நடத்திய சோதனையில் பழனிவேலு என்பவரது வீட்டில் முதல் கட்டமாக 20 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் ஆகியவை கைப்பற்றப்பட்டது இவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் போஸ் நகர் பகுதியில் உள்ள முகமது கனி என்பவர் மொத்த வியாபாரம் செய்து வருவதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தி 1300 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்..

இதன் மதிப்பு ரூபாய் 34 லட்சம் என கூறப்படுகிறது மேலும் இது தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிவேல் மற்றும் முகமது கனி ஆகியவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 1300 கிலோ எடையுள்ள ரூபாய் 34 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் ஹான்ஸ் பொருட்கள் கைப்பற்றப்பட்டது புதுக்கோட்டை நகரில் பரபரப்பு உள்ளாகியுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here