
போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 நபர்கள் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் தகவல்.
மத்திய அரசு ஊழியர்கள் 14 பேர், தமிழக அரசு ஊழியர்கள் 5 பேர், ஒரு பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் 21 பேர் என மொத்தம் 41 பேர் உள்ளனர் – தமிழக அரசு.
வழக்கு குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
போலி பாஸ்போர்ட் வழக்கின் விசாரணையை, 3 மாதத்தில் “Q பிரிவு” காவல்துறை தலைவர் மேற்பார்வையில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.