
தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணியில் மோசமான நிலையில் மற்றும் முகம் சுளிக்கும் வகையிலும் இருந்து வந்த சிந்தாமணி பூங்கா பகுதியை சுத்தம் செய்தும் அந்த ஊர் இளைஞர்கள் பயன்படுத்து வண்ணம் சிந்தாமணி ஊர் இளைஞர்கள் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையை ஏற்று காவல் ஆய்வாளர் அவர்கள் பூங்கா சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த அனைத்து போஸ்டர்களையும் இளைஞர்கள் உதவியுடன் அகற்றி சுத்தம் செய்து ஒவ்வொரு சுவரிலும் வாசகங்கள் எழுதப்பட்டு அந்த சுவர்களுக்கு வர்ணம் பூசப்பட்டு இளைஞர்களுக்கு எழுச்சி தரும் வாக்கியங்களை பொறிக்கப்பட்ட வாசகங்கள் 1.போதைக்கு அடிமையாகாதே உன்னையும் உன் குடும்பத்தையும் இழக்காதே
2.படிப்பு தான் உனக்கு மிகப்பெரிய சொத்து அதை விலை கொடுத்து மட்டுமே வாங்க முடியும் யாராலும் திருட முடியாது
3.தனிநபர் பிரச்சனை தனி நபரோடு போகட்டும் அதை ஜாதி மதம் ஊர் பிரச்சனை ஆக்காதே அதில் நீ வீண் போகாதே, என்ற பல சிந்தனையூட்டும் வாக்கியங்களை சுவரில் எழுதியும் நல்ல முறையில் சிந்தாமணி இளைஞர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தென்காசி காவல்துறை எடுத்த முயற்சிக்கு ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.