
பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவை, திருவனந்தபுரத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர்
நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவரது கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் வலதுகரம் ராக்கெட் ராஜா.
வெங்கடேச பண்ணையாரின் சகோதரர் சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து செயல்படுபவர் ராக்கெட் ராஜா
அதிமுக ஆட்சியில் வெங்கடேச பண்ணையார் சுட்டுக்கொல்லப்பட்டார்! வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்விக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த நிலையில் ராக்கெட் ராஜா திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டார்..