
வனத்துறையினர் சிறுத்தையின் தோலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே உள்ள அம்மா பட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன்,முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலரான இவரது வீட்டில் சிறுத்தையின் தோல் மொட்டை மாடியில் காய வைக்கபட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் துரைப்பாண்டியன் வீட்டுக்கு சென்று பார்த்த போது துரைப்பாண்டியன் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டார்
பின்னர் வீட்டின் மேல் மாடிக்கு சென்று பார்த்த போது அங்கே சிறுத்தையின் தோல் மஞ்சள் பூசி மொட்டை மாடியில் காய வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்கள் தகவல் அளித்தனர்
முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் சிறுத்தையை சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக மொட்டை மாடியில் காய வைத்து இருப்பது கண்டறியப்பட்டது
இந்த சிறுத்தை எங்கே எப்போது யாரால் வேட்டையாடப்பட்டது? எதற்காக சிறுத்தையை வேட்டையாடி மொட்டை மாடியில் காய வைத்து இருக்கிறார்கள்?என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் தலை மறைவான துரைப்பாண்டியனையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே தேனி எம் பி ரவீந்திரநாத்க்கு சொந்தமான சொர்க்கம் வனப்பகுதியில் உள்ள இடத்தில் இரண்டரை வயது மதிக்கத்தக்க சிறுத்தை மர்மமாக இறந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் வீட்டின் மாடியில் சிறுத்தை வேட்டையாடப்பட்டு தோல் காயவைக்கப்பட்ட சம்பவம் தேனியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.